India vs West Indies: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி அதிகம் விளையாடவில்லை. இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஒருநாள் போட்டியில், கோஹ்லி விளையாடும் அணியில் இருந்தும் பேட்டிங் செய்யவில்லை. கென்சிங்டன் ஓவலில் நடந்த இரண்டாவது போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற மிடில் ஆர்டர் வீரர்கள் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக முயற்சிக்கப்பட்டதால் பேட்டிங் வரிசை மீண்டும் மாற்றப்பட்டது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, கோஹ்லி மற்றும் ரோஹித்தின் விலகலுக்கான காரணத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் பெரிய போட்டிகளை பார்ப்போம் என்று நினைக்கிறேன். உங்களிடம் மிகவும் நேர்மையாக இருக்க, ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை வரவிருக்கும் சுழற்சியின் இந்த கட்டத்தில், எங்களுக்கு ஏற்பட்ட காயங்கள், பெரிய போட்டிகளை விளையாடவேண்டும் போன்ற விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டம் மற்றும் ஒவ்வொரு தொடர் குறித்தும் நாங்கள் கவலைப்பட முடியாது. நாங்கள் அவ்வாறு செய்தால், அது தவறு என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
திங்களன்று, டிரினிடாட் பயணக் குழுவின் வீடியோவில் விராட் கோலி காணப்படாதபோது, தருபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது. மேலும், கோஹ்லி மூன்றாவது ஒருநாள் போட்டியைத் தவறவிடுவார் என்பது மட்டுமல்லாமல் ஒருநாள் தொடர் முடிவதற்குள் அவர் தாயகம் திரும்புவார் என்றும் சமூக ஊடகங்களில் நாள் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும், வெளியான தகவலின் படி, விராட் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்ற கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததில்லை. 3வது ஒருநாள் போட்டியிலாவது ருத்ராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்திய அணி: இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜெய்தேவ் உனத்கட், சாஹல், ருதுராஜ் கெய்க்வாட்
மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப் (c & wk), பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், டொமினிக் போவெல், ரோவ்மேன் ட்ரேக்ஸ், ரோவ்மேன் டிரேக்ஸ், தாமஸ்