புதிய தலைமுறை கேடிஎம் RC390 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தோற்ற அமைப்பில் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டதாக வரவுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் மாடலை போன்ற அடுத்த தலைமுறை மாடல் புதிய சட்டகம் மற்றும் துணை-பிரேம் அமைப்ப்பின்னை பெற்றிருக்கலாம்.
2024 KTM RC 390
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தன்மை கொண்டதாக விளங்கும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் புதுப்பிக்கட்ட அதிக பவர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற 399சிசி என்ஜின் பெற வாய்ப்புகள் உள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற பைக்கில் புதிய ஃபிரேம் கொடுக்கப்பட்டு ஃபேரிங் பேனல்களில் பெரிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளது.
WP அப் சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக் மற்றும் இரு சக்கரங்களிலும் இலகு எடை கொண்ட டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த பிரேக்குகள் தற்போதைய தலைமுறை RC 390 மாடலில் காணப்படுவதனை போலவே இருக்கின்றது.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்விங்கார்ம் ஆனது முன்பை விட சற்று நீளமாக உள்ளது. ஃபுட்பெக் நிலை, கைப்பிடி நிலை ஆகியவை தற்போதைய KTM RC 390 பைக்கினை போலவே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதாகத் தெரிகிறது.
அடுத்த தலைமுறை KTM RC 390 பைக் 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 துவக்க மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.