Upcoming Two wheelers August 2023 – வரவிருக்கும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் பற்றிய விபரம்

பண்டிகை காலத்தை எதிர்கொள்ள உள்ள இந்திய சந்தையில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ஹீரோ கரீஸ்மா XMR என இரண்டு மாடல்களும் கவனத்தை பெறுகின்றது.

அடுத்தப்படியாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏதெர் 450S மற்றும் டிவிஎஸ் எலக்ட்ரிக் என்டார்க் ஆகியவற்றுடன் மேம்பட்ட 2023 ஹீரோ பிளெஷர் பிளஸ் ஆகியவை வரவுள்ளது.

re bullet

Royal Enfield Bullet 350

புதிய ஜே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் பெறப்பட்ட 349சிசி ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும். சேஸ் உட்பட பல்வேறு பாகங்களில் மேம்பாடுகள் செய்யப்பட்ட புதிய புல்லட் 350 விற்பனைக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.

karizma xmr

Hero Karizma XMR 210

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. கரீஸ்மா பைக்கில் முதன்முறையாக ஹீரோ நிறுவனம் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தி 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கரீஸ்மா விற்பனைக்கு ரூ.1.70 லட்சத்தில் வெளியாக உள்ளது.

honda sp 160 teaser

Honda SP 160

யூனிகார்ன் 160 என்ஜினை பயன்படுத்தி எஸ்பி 125 போன்ற வடிவமைப்பினை பெற்ற ஸ்போர்ட்டிவ் மாடலை 160சிசி சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலுக்கு ஹோண்டா SP160 என்ற பெயர் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. விற்பனைக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படலாம்.

2023 Hero Pleasure plus Xtech

ஹீரோ மோட்டோகார்ப் தனது பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரில் கூடுதலாக புதிய நிறம் மற்றும் கனெக்ட்டிவ் வசதிகளுடன் SOS எச்சரிக்கை, வாகன இருப்பிடம் அறிதல் மற்றும் ரிமோட் இம்மொபைல்ஸர் ஆகியவற்றை சேர்க்க உள்ளது.

புதிய பிளெஷர்+ அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

450s escooter

Ather 450s

பட்ஜெட் விலையில் வரவுள்ள ஏதெர் 450எஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏதெர் 450 எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 3kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது.

tvs entorq teased

TVS Ntorq Electric

ஆகஸ்ட் 23 ஆம் தேதி துபாயில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், க்ரியோன் அடிப்படையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்டார்க் எலக்ட்ரிக் என்ற பெயரில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

அடுத்தப்படியாக, சமீபத்தில் வெளியான பிஎம்டபிள்யூ CE02 மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையிலான மாடலையும் வெளியிடலாம்.

Ola Electric bike Two-Wheelers

Ola Electric Bike

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 5 எலக்ட்ரிக் பைக் மாடலின் உற்பத்தி நிலையாக காட்சிக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பே இது தொடர்பான டீசரை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் அட்வென்ச்சர், ஸ்போர்ட்டிவ், க்ரூஸர் என பல்வகையில் பைக் மாடலை காட்சிக்கு வெளிப்படுத்தலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.