ரூ. 165 கோடி சொத்து: உங்களுக்கு ரொம்ப பிடிச்சவர் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை

கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஒரு நடிகை தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை என்பது தெரிய வந்திருக்கிறது.

நடிகைகள்ரூ. 3000 கோடி சொத்து: தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்கதென்னிந்திய திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. ஹீரோக்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வாங்கினால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகைக்கு ரூ. 5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கொடுக்கிறார்கள். இந்நிலையில் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை யார் என்பது அறிந்து ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான்.சூப்பர் ஸ்டார்​யாருடா சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதில் கொடுத்த ரஜினி​​நயன்தாரா​கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 165 கோடி ஆகும். தென்னிந்தியாவின் பணக்கார நடிகை நயன்தாரா தான்.
​தமன்னா​Jailer: 40 வயது மூத்தவரான ரஜினியுடன் நடிப்பதா?: தமன்னா சொன்ன சூப்பர் பதில்தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள், வெப்தொடர்களில் நடித்து வரும் தமன்னா தான் இரண்டாவது பணக்கார தென்னிந்திய நடிகையாவார். அவரின் சொத்துமதிப்பு சுமார் ரூ. 110 கோடி ஆகும். சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை நகை வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கிறார் தமன்னா. அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் என்று பேசப்படுகிறது.

​அனுஷ்கா ஷெட்டி​பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மூலம் இந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த அனுஷ்கா ஷெட்டிக்கு பணக்கார தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. அவரின் சொத்துமதிப்பு ரூ. 100 கோடி ஆகும். அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
​சமந்தா​நயன்தாரா, தமன்னா, அனுஷ்காவை அடுத்து சமந்தா தான் இருக்கிறார். ரூ. 89 கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார் சமந்தா. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் சமந்தா தற்போது நடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். 6 மாதங்கள் எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலனில் கவனம் செலுத்தவே இந்த பிரேக்.
​பூஜா ஹெக்டே​பணக்கார தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் பூஜா ஹெக்டே. பாலிவுட், டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடியாகும். அவர் படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

​Taapsee: டாப்ஸி இப்படியொரு பிசினஸ் பண்றார்னு உங்களுக்கு தெரியுமா?

​ரஷ்மிகா மந்தனா​நேஷனல் கிரஷ்ஷான ரஷ்மிகா மந்தனா ரூ. 28 கோடி சொத்துக்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார். ரஷ்மிகா தற்போது பாலிவுட்டில் பிசியாகி வருகிறார். இதனால் தனக்கு பிடித்த சில தெலுங்கு இயக்குநர்கள், நடிகர்கள் படங்களிலேயே நடிக்க முடியாமல் போகிறது. டேட்ஸ் பிரச்சனையால் ஆசைப்பட்ட அனைத்து படங்களிலும் அவரால் நடிக்க முடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.