தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிரபலமான நாயகனாக வலம் வருகின்றார் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது பா.பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் தன் ஐம்பதாவது படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார்.
இடையில் சில காலம் தோல்வி முகத்தில் இருந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். கடந்தாண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படம் நூறு கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தனுஷ் பிட்னஸ்
இந்நிலையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியான நிலையில் இப்படம் டிசம்பர் மாதம் திரையில் வெளியாக உள்ளது.
Vijay: விஜய்யும் நானும் நட்பாக பேசி பிரிந்தோம்..எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை..ஓபனாக பேசிய இயக்குனர்..!
இதைத்தொடர்ந்து தற்போது தன் ஐம்பதாவது பட வேலைகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளார் தனுஷ். தன் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு பிசியாக இருந்து வரும் தனுஷை பற்றி பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பால்கி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
பால்கி கருத்து
தனுஷின் பாலிவுட் படமான ஷமிதாப் என்ற படத்தை இயக்கிய பால்கி பேசியதாவது, தனுஷிற்கு என்னதான் வயதானாலும் எப்போதும் ஸ்கூல் பையன் மாதிரி தான் இருப்பார். அவர் என்னதான் அதிகமாக சாப்பிட்டாலும் ஒரு கிராம் வெயிட் கூட ஏறமாட்டார் என்றார் பால்கி.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இவ்வாறு இயக்குனர் பால்கி தனுஷை பற்றி பேசியது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் திரைத்துறையில் நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் அதே போல உடல்வாகோடு இருந்து வருகின்றார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.