காந்திநகர்:
குஜராத்தில் இனி காதல் திருமணம் செய்வதே குதிரைக் கொம்பாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. காதலர்கள் திருமணம் செய்து கொள்ள இருதரப்பு பெற்றோர்களின் சம்மதமும் முக்கியம் என்ற அம்சத்தை கொண்டு வரும் முயற்சியில் குஜராத் அரசு ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சமூகத்தில் சாதி எனும் மிகப்பெரிய மோசடி ஆழ வேரூன்றி கிடக்கிறது. எத்தனை அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் மட்டும் அன்று முதல் இன்று வரை அப்படியே மாறாமல் தொடர்கின்றன என்பதுதான் வேதனையின் உச்சம்.
இப்படிப்பட்ட சாதியை ஒழிக்க கலப்பு திருமணங்கள் மட்டுமே ஒரே வழி எனக் கருதப்படும் சூழலில், அதற்கும் ஆப்பு வைக்க தயாராகி வருகிறது குஜராத்தில் ஆளும் பாஜக அரசு.
இதுகுறித்து குஜராத்தில் சர்தார் படேல் குழுமம் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்த நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருக்கும் போது, சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் சில முக்கியமான விஷயங்களை என்னுடன் கலந்தாலோசித்தார். குஜராத்தில் பல இளம்பெண்கள் சமூக விரோதிகளாலும், கிரிமினல்களாலும் காதல் வலையில் வீழ்த்தப்படுவது அதிகரித்துள்ளதை எனது கவனத்துக்கு அவர் கொண்டு வந்தார். காதல் திருமணங்கள் என்ற பெயரில் பெண்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் நிகழ்வுகளும் நடைபெற்று வருவதை நானும் அறிவேன்.
என்னை ‘ஆடு’ என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.. ஆட்டுக்கும் எனக்கும் தொடர்பு அதிகம்.. அண்ணாமலை ஓபன் டாக்
மேலும், பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் காதல் திருமணங்களால் கொலை, தற்கொலை போன்ற குற்றங்களும் அதிகம் நிகழ்கின்றன. எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில், காதல் திருமணங்களுக்கு இருதரப்பைச் சேர்ந்த பெற்றோர்களின் சம்மதத்தையும் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த நடவடிக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என அரசாங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் சாதகமான முடிவு வரும் பட்சத்தில் அரசாங்கம் இதுதொடர்பாக விரைவில் சட்டம் இயற்றும் என முதல்வர் பூபேநதிர படேல் தெரிவித்தார்.