சென்னை: நடிகர் கார்த்தி -பிஎஸ் மித்ரன் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் சர்தார். படத்தில் ராஷி கண்ணா, ரிஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே வில்லனாக மிரட்டியிருந்தார். படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்திருந்தது.