தீபிகா படுகோனேவின் கவர்ச்சி போட்டோ : கணவர் ரன்வீர் சிங் கமெண்ட்

பாலிவுட்டின் நட்சத்திரத் தம்பதியர் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே. மாடலிங்கிலிருந்து பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்த தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

தீபிகா படுகோனே நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு காலத்தில்… ஆனால், வெகு காலத்திற்கு முன்பில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு மணி நேரத்தில் அவரது கணவரான ரன்வீர் சிங், “ஒரு எச்சரிக்கை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என கமெண்ட் செய்துள்ளார். அவரது கமெண்ட்டை மட்டும் 38 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். தீபிகாவின் இந்த கவர்ச்சிகரமான புகைப்படப் பதிவிற்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

தீபிகா படுகோனே தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்திலும், 'பைட்டர்' படத்திலும் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி அவுர் ரானி கி பிரேம் கஹானி' படம் கடந்த வாரம்தான் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.