Kavin: புது மாப்பிள்ளையாகும் இளம் நடிகர் கவின் – மணப்பெண் இவர்தான்!

தமிழின் இளம் நட்சத்திர நடிகர் கவின், தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

கவின்

இதையடுத்து தற்போது சினிமாவிலும் கால் பதித்து நாயகனாகத் தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த ‘லிஃப்ட்’ படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவின்

தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் இந்த மாதம் (ஆகஸ்டு) 20-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. வாழ்த்துகள் கவின் – மோனிகா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.