சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 12 4ஜி மாடல் போனும் இத்துடன் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 12 5ஜி சிறப்பு அம்சங்கள்
- 6.79 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்
- 4 ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 50 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- டைப் சி யுஎஸ்பி போர்ட்
- வரும் 4-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது
- இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது. வேரியண்ட்டுக்கு ஏற்ப விலையில் மாற்றம் உள்ளது
Just 1 day to go for the launch of our revolutionary #Redmi12 Series.
You don’t want to miss this and so much more tomorrow at 12PM!
Be here: https://t.co/V5UqdNvOv5 pic.twitter.com/QGMXLyl3FP— Redmi India (@RedmiIndia) July 31, 2023