சென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள படம் போர் தொழில். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.