சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள காப்பகங்களில் பணியாற்றி வந்த நபர், 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த, 45 வயதான நபர், கடந்த 2022ல் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் கூறியதாவது:
இந்த நபர், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில், 2007 – 2022 வரை பணியாற்றி வந்தார். அப்போது, குழந்தைகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, 2022ல் கைது செய்யப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் இவர், 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்; பல குழந்தைகளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். தன் அட்டூழியங்களை கேமராக்கள் வாயிலாக படமும் எடுத்துள்ளார். இந்த படங்கள் மற்றும் வீடியோக்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இவர் மீது, 1,623 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement