தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், குறிப்பாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்? ஏனெனில் இந்த விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடுவதில்லை. தன்னாட்சி அதிகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளே தேர்வுகள் நடத்தி முடிவுகளை அறிவித்து பட்டமளிப்பு விழாவையும் நடத்தி விடும். மேலும் புதிய பாடத்திட்டங்களுக்கு அங்கீகாரம், கல்லூரி குழுவில் உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்படுகின்றன.
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள்மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 90 தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான ஒரு விஷயத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. தன்னாட்சி அதிகாரம் எல்லாம் சரி தான். இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக இருக்கிறதா? வேலைவாய்ப்பிற்கு திண்டாட்டமாக இருக்கும் சமூகத்தில் உரிய திறன்களுடன் வெளியே வருவதை உறுதி செய்கிறார்களா? போன்ற கேள்விகள் எழுந்தன.அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுஇதை பரிசோதித்து பார்க்கும் வகையில் ஒரு பலே ஏற்பாட்டை அண்ணா பல்கலைக்கழகம் செய்யவுள்ளது. ஏன் இப்படி திடீரென்று ஒரு திட்டம் எனக் கேட்கலாம். தன்னாட்சி அதிகாரம் பெற்றதை அடுத்து, சில கல்லூரிகள் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து வருகின்றன. இங்கு தான் சந்தேகமே எழுந்துள்ளது. ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா? அப்படி இருந்தால் அதை கையும் களவுமாக பிடித்து சரி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
செமஸ்டரில் புதிய பேப்பர்அதாவது, வல்லுநர்கள் குழுவை வைத்து மிகவும் கடினமான கேள்வித்தாள் ஒன்றை செட் செய்வது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு கேள்வித்தாள் என்ற வகையில் இடம்பெற வைப்பது. அதன் விடைகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக மதிப்பீடு செய்வது. இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தரம் நன்றாக இருக்கிறதா? இல்லை போதிய நிலையை எட்டவில்லையா? என்பது தெரிந்துவிடும்.
நடப்பாண்டு முதல் அமல்இதுதொடர்பான தீர்மானத்தை சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக கல்வி கவுன்சில் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கொண்டு வந்தது கவனிக்கத்தக்கது. இந்த அக்னி பரீட்சையை நடப்பு 2023-24 கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் (NIRF) தேர்வு செய்துள்ள முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் மேற்குறிப்பிட்ட தேர்வை எழுத தேவையில்லை.பொறியியல் கல்லூரி முதல்வர்கள் ஷாக்மேலும் NAAC A++ கிரேடு மற்றும் 6 ஆண்டுகளாக NBA அங்கீகாரம் பெற்ற துறைகளை பெற்றிருந்தால் தேர்வு தேவைப்படாது. இதை கேட்டதும் தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் இதன் விளைவான தன்னாட்சி அதிகாரத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ என நினைக்கின்றனர். ஆனால் வேறு வழியில்லை. தேர்வை எழுதி தான் ஆக வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்த உள்ளது. இது மாணவர்கள் நேரடி கற்றல் சார்ந்தது.
வகுப்பறை கற்றலும், லேப் பயிற்சியும்தற்போது பாடங்களை ஒரு ஆசிரியரும், லேப் பயிற்சிகளை மற்றொரு ஆசிரியரும் வழங்கி வருகின்றனர். இதை மாற்றி முதல் நாள் பாடம் கற்பித்தல், அடுத்த நாளே லேப் பயிற்சி என ஒரே ஆசிரியரே கையாள்வார். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியாக நடைபெறும். முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கேம்பஸ் கல்லூரிகளாக கிண்டி காலேஜ் ஆப் எஞ்சினியரிங், எம்.ஐ.டி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஏ.பி ஆகியவற்றில் அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.