சீமான் மீது குண்டாஸ்? கொதிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான

தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சீமான், இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்றார்.

மணிப்பூர் மக்களும் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள், அதேபோல் இங்குள்ள கிறிஸ்தவ மக்களும் வாக்களிக்க மாட்டார்கள், தேவனின் பிள்ளைகளாக இருந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றார். சீமானின் இந்த பேச்சுதான் சர்ச்சையாக மாறியுள்ளது.

சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, சீமான் தனக்கு ஓட்டு கிடைக்கவில்லை என்று இப்படி அநாகரீமாக பேசுவதாகவும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல் நடிகர் ராஜ்கிரண் மறைமுகமாக கழிசடைகள் பேச ஆரம்பித்தால் விளைவு மோசமாக இருக்கும் என எச்சரித்திருந்ததார்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னி அரசும் தனது கண்டனங்களை பதிவு செய்தார். இதேபோல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர் சீமான் மீது மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்துவர்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசி வரும் வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவரது செயல் என்பது சமூக ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.