மஹிந்திரா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான XUV300 மேம்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பாரக்கலாம். எக்ஸ்யூவி 300 காரில் பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளுடன் போட்டியாளர்களில் இல்லாத பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தற்பொழுது எக்ஸ்யூவி 300 மாடலில் உள்ள என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல், 117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
2024 Mahindra XUV300
டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகியவற்றுடன் ரெனோ கிகர், நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற எக்ஸ்யூவி300 காரில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், டெயில் லைட் பெறுவதுடன் புதிய பம்பர் ஆகியவற்றை பெறுவது உறுதியாகியுள்ளது.
தற்பொழுது விற்பனையில் எக்ஸ்யூவி 300 காரின் டாப் வேரியண்டில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளதால், பனோரோமிக் சன்ரூஃப் ஆனது பெற உள்ளது. மற்றபடி, இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் இடம்பெறலாம். அடுத்த, சில மாதங்களில் டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV300 ரூ. 8.42 லட்சம் – 14.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆக உள்ளது.