உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய பாகிஸ்தான் சம்மதம்

புதுடெல்லி,

இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அங்கு நவராத்திரி விழா நடப்பதால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்றும், அதனால் போட்டியை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து போட்டியை வேறு நாளுக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி ஒரு நாள் முன்பாக அதாவது அக்டோபர் 14-ந்தேதி அதே இடத்தில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும். இதனால் அக்டோபர் 12-ந்தேதி ஐதராபாத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான்-இலங்கை ஆட்டம் 10-ந்தேதிக்கு மாற்றப்படுகிறது. திருத்தப்பட்ட போட்டி அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.