அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் நியமனம்

வாஷிங்டன்,

எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணை முகமையின் வழியே சர்வதேச குற்றங்களை தடுக்கவும், பயங்கரவாதிகள் குறித்து தகவல்கள் திரட்டும் வேலையிலும் அமெரிக்கா ஈடுபடுகிறது. இதன் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார்.

இந்த நிலையில் உதா மாகாணத்தின் எப்.பி.ஐ. தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷோஹினி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.ஷோஹினி இதற்கு முன்பு இயக்குனர் ரேயின் சிறப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை குழுவின் உயர் அதிகாரியாக இருந்து பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளார்.

2001-ம் ஆண்டில் புலனாய்வு அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர் குவாண்டனாமோ பே கடற்படைத்தளம், லண்டனில் உள்ள எப்.பி.ஐ அலுவலகம், பாக்தாத் ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார். கனடாவை தலைமையிடமாக கொண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் திட்டத்தின் மானேஜராகவும் பதவி வகித்துள்ளார். மனோதத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் சைபர்-ஊடுருவல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பித்து நிபுணத்துவம் பெற்றவர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.