காஞ்சிபுரம்: மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைப்பதற்கு பதிலாக, டீ, காபி வழங்கப்படும் காகித கப் கொண்டு சுவாச சிகிச்சை அளித்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து, இந்த தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுவன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு […]