பிரேசில் பயங்கரம்… போதைப்பொருள் கும்பல் அட்ராசிட்டி… சீறிய புல்லட்கள்… 43 பேர் சுட்டுக் கொலை!

பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் போதைப் பொருள் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க சிறப்பு அதிரடிப் படை போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினர்.

பிரேசில் ரெய்டு சம்பவங்கள்

எங்கு பார்த்தாலும் அதிரடி ரெய்டு, கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. போதைப் பொருள் கும்பல்கள் சந்திக்கும் இடங்கள் குறித்து உளவுத்துறையிடம் இருந்து போலீசார் ரகசிய தகவல்களை பெற்றனர். அதன் அடிப்படையில் ரெய்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். இதன்மூலம் 58 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

போலீசார் துப்பாக்கிச்சூடு

இதில் சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறின. போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப் பொருள் கும்பலும், குற்றவாளிகளை பிடிக்க போலீசாரும் மாறி மாறி தாக்கினர். அந்த வகையில் சா பாலோ நகரில் நடந்த ரெய்டின் போது 14 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.

வெடித்தது பயங்கர மோதல்

இங்கு மட்டும் 385 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பாஹியா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இதுதவிர சால்வடார், இடாடிம், காமாகரி ஆகிய நகரங்களிலும் போலீசார், போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையில் மோதல் வெடித்தது.

3 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

இதில் இடாடிம் நகரில் 8 பேரும், காமாகரி பகுதியில் 7 பேரும், சால்வடாரில் 4 பேரும் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், போன்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த ரெய்டிற்காக பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதேபகுதியில் நடந்த ரெய்டின் போது 10 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வலுக்கும் கண்டனம்

இவ்வாறு பல்வேறு நகரங்களில் நடந்த ரெய்டில் 43 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூட்டிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படியே சுட்டு தள்ளுவது? அடிப்படை மனித உரிமைகள் கூட காக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.