ஆதரவின்றி இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்

உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்தவர் மோகன்(60). சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றி வந்தார். கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கமலின் நண்பர்களில் ஒருவராக குள்ள மனிதராகவே நடித்தார். அதன் பின்னர் 'நான் கடவுள்', 'அதிசய மனிதர்கள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு நின்று போனதும் சென்னையில் இருந்து கிளம்பி பல ஊர்களுக்கு சென்று, கிடைக்கும் வேலையை பார்த்துக் கொண்டு காலத்தை கடத்தி வந்தார். கடைசியாக மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தங்கி பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 60 வயதான மோகன் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிக்சை எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.

போலீசார் வந்து உடலை மீட்டு விசாரணையில் இறங்கியபோதுதான் அது மோகன் என்றும், சினிமா துணை நடிகர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் மோகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.