சிறு பட்ஜெட் படங்களுக்கு இடையே 'மெக் 2' இன்று வெளியானது
நட்டி நட்ராஜ் நடித்த வெப், சான்றிதழ், பிரியமுடன் பிரியா, லாக்டவுன் டயரி, கல்லறை ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் இன்று வெளியாகின்றன. இந்த படங்களுடன் ஹாலிவுட் படமான 'மெக் 2' படமும் வெளியாகி உள்ளது. கடலில் வாழும் ராட்சத கொலைகார சுறா மீனை கதை களமாக கொண்டு உருவான 'மெக்' படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம் 'மெக் 2: தி டிரன்ச்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜேசன் இதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் வூ சிங், சோபியாக கெய், பேஜ் கென்னடி உள்பட பலர் நடித்துள்ளனர். கில் லிஸ்ட், பிரீ பயர், ரெபேக்கா, இன் தி எர்த் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய பென் வெல்த்தி இயக்கி உள்ளார்.
இந்த படம் சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ் மொழி மாற்றத்திலும் வெளியாகி உள்ளது.