Tata Punch CNG – பஞ்ச் எஸ்யூவி காரில் சிஎன்ஜி மாடலை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சிஎன்ஜி சந்தையில் பஞ்ச் எஸ்யூவி, டிகோர் மற்றும் டியாகோ என மூன்று மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டாடா பஞ்ச் சிஎன்ஜி விலை ரூ.7.10 லட்சம் முதல் ரூ.9,68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சிஎன்ஜி சிலிண்டர் பெற்ற டியாகோ காரின் சிஎன்ஜி விலை ரூ.6.55 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரையும், டிகோர் சிஎன்ஜி விலை ரூ.7.80 லட்சம் முதல் ரூ.8.95 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாடல்களும் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன.

Tata Punch i-CNG

1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கின்ற பஞ்ச் எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட் 86hp மற்றும் 113Nm டார்க், CNG ஆக வரும்பொழுது, 73.4 hp மற்றும் 104 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும். இந்த டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் போலவே இந்த மாடலையும் சிஎன்ஜியில் ஸ்டார்ட் செய்யலாம். இந்த அம்சம்  போட்டியாளர்களால் வழங்கப்படவில்லை.

60 கிலோ கொள்ளளவு பெற்ற பஞ்ச் ஆனது டூயல் சிலிண்டர் பெற்றதாகவும், மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாகவும் விளங்கின்றது.

வெளிப்புற தோற்ற அமைப்பில் i-CNG என்ற பேட்ஜை தவிர மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை. இன்டிரியரில் வழங்கப்பட்டுள்ள முக்கிய வசதிகளில் டாப் அகாம்ப்லிஷ்ட் வேரியண்டில் 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, 16 இன்ச் அலாய் வீல்கள், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், தானியங்கி ஏசி கட்டுப்பாடு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் சன்ரூஃப் கூட இடம் பெற்றுள்ளது.

போட்டியாளரான ஹூண்டாய் எக்ஸ்ட்ர் சிஎன்ஜி விலை ரூ.8.24 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை அமைந்துள்ளது. துவக்க நிலை எஸ்யூவி சந்தையில் டாடா பஞ்ச் முன்னணி வகிக்கின்றது.

TATA PUNCH i-CNG விலை
Trims i-CNG
Pure ₹ 7.10 லட்சம்
Adventure ₹  7.85 லட்சம்
Adventure Rhythm ₹  8.20 லட்சம்
Accomplished ₹  8.85 லட்சம்
Accomplished Dazzle S ₹  9.68 லட்சம்

tata punch cng boot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.