தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்களாக, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஆர்.ஏ.யு.பி. ராஜபக்சே மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஷெமால் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கையில் விளையாட்டின் மேம்பாடு மற்றும் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்களின் பிரதான பொறுப்புகளில் ஒன்றாகும்.