ஈரானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொஸேன் அமீர் அப்துல்லாஹியன் விடுத்த அழைப்பிற்கு இணங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி இன்று (4) தொடக்கம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்கின்றார்.
அமைச்சர் இச்சுற்றுப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி கலாநிதி ஸெயித் ஈப்ராஹிம் ரயிஸியை சந்திக்கவுள்ளதுடன், இருநாடுகளுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்தும் நோக்கில் ஈரானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொஸேன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், அமைச்சர் ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனத்தில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.