மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ராகுல் காந்திக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து […]