இன்னும் 40 நாள்கள் தான்: ஸ்டாலின் வைத்த டார்கெட் – வேகமெடுக்கும் அரசு இயந்திரம்!

தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் சிறப்பு திட்டங்கள் சிலவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. முத்திரை பதிக்கும் அந்த திட்டங்கள் குறித்து அதன் அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துகிறார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் – தமிழக அமைச்சர்களை அழைத்து ஆலோசனை!தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் கூட முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், கே.ஆர்.பெரிய கருப்பன், முத்துசாமி, தா.மோ.அன்பரசன், கயல்விழி செல்வராஜ் மற்றும் துறை வாரியாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு திட்டங்களை மானிட்டர் செய்யும் ஸ்டாலின்அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எக்காரணத்தைக் கொண்டும் கிடப்பில் போடப்படக்கூடாது, நிர்ணயித்த கால அளவுக்குள் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் பயன்பெற முடியும். எனவே அமைச்சர்கள் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அதிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகிறார்.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!ஒவ்வொரு நாளும் எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன எவ்வளவு வரக்கூடும் என்பது வரை உடனுக்குடன் தகவலை கேட்டுப்பெறுகிறாராம். விண்ணப்பங்களை பதிவு செய்யும் முதற்கட்ட முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) இரண்டாம் கட்ட முகாம்கள் தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தகுதியானவர்களின் எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுவிடக்கூடாது, ஆவணங்களை வழங்குவதில் அவர்களுக்கு சிரமம் இருந்தால் அதற்கு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாற்பது நாள்கள் தான் டைம்!செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களின் வங்கி கணக்கிலும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களின் வீடுகளுக்கு கள ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!​​
எந்த சிறு பிசிறோ, தடங்கலோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் 40 நாள்களுக்குள் திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் நிறைவடைய வேண்டும் என அரசு இயந்திரத்தை வேகமாக சுழலவிட்டுள்ளார். பெண்களை குறிவைத்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கும் ஸ்டாலின், இந்த திட்டம் ஆண்டுகள் பல கடந்தும் மக்களிடம் வரவேற்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.