வவுனியா மக்களின் சுத்தமான குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள நீர் திட்டங்கள் நேற்று (04) இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியில் நீர் திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக மாறியுள்ளது.
இந்த திட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 500 குடும்பங்கள் பயனடைவார்கள்.
வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் திரு.குலசிங்கம் திலீபன் ஆகியோரும் நீர் திட்டத்தை திறந்துவைத்தனர்.