![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691214434_NTLRG_20230804103333895230.jpg)
கணவர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா ‛நாதஸ்வரம், பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி' போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். அரவிந்த் சேகர்(30) என்பவரை காதலித்து வந்தார் ஸ்ருதி. கடந்தாண்டு இவர்களின் திருமணம் நடந்தது. கடந்த மே 27ம் தேதி தான் முதல் திருமண நாளை அரவிந்தும் ஸ்ருதியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில், அரவிந்த் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடி பில்டரான அரவிந்த், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் அரவிந்தின் இறப்பிற்கு இரங்கல் செய்தி தெரிவித்தும் வரும் நிலையில், திருமணமாகி ஒரு ஆண்டிலேயே கணவரை இழந்து தவிக்கும் ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ருதி தனது கணவர் அரவிந்த் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛உன் உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. உயிரும், எண்ணங்களும் என்னை சுற்றியே வருகிறது. அமைதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பு இன்னும் அதிகரிக்கிறது. உன் உடனான நிறைய நினைவுகளை என்னுள் வைத்துள்ளேன். அவை வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும். முன்பை விட இன்னும் அதிகமாக காதலிக்கிறேன் அரவிந்த். என் அருகிலேயே நீ இருப்பது போன்று உணர்கிறேன்'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.