Chiyaan Vikram: பகையை மறந்து விக்ரம் செய்துள்ள காரியம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். தற்போது இவரது நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது செய்துள்ள காரியம் ரசிகர்கள் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்தவர் வி.ஏ. துரை. இவர் விக்ரமின் சேது, பிதாமகன், கஜேந்திரா, பாபா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது சொத்துக்களை எல்லாம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த சில மாதங்களாக இவர் உடல்நிலை குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவரது மருத்துவ செலவிற்கு ரஜினி, சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர். இந்நிலையில் ஓரளவு துரை குணமாகிவிட்டாலும் நீரிழவு நோய் நோய் காரணமாக ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செயற்கை கால் பொருத்த போதுமான பணமின்றி தவித்துள்ளார் துரை.

தற்போது அவரின் நிலை அறிந்து நடிகர் விக்ரம் தயாரிப்பாளர் துரைக்கு செயற்கை கால் பொருத்த வேண்டிய பணத்தை கொடுத்து உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவரின் செலவுக்காகவும் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் வீட்டில் திடீரென நடந்த முன்னணி இயக்குனர்களின் சந்திப்பு: தீயாய் பரவும் புகைப்படம்.!

பாலா இயக்கத்தில் ‘பிதாமகன்’ படம் வெளியான சமயத்தில் தயாரிப்பாளர் துரைக்கும், விக்ரமுக்கும் இடையே சம்பள பாக்கி காரணமாக பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது 20 ஆண்டு பகையை மறந்து தயாரிப்பாளர் துரைக்கு நடிகர் விக்ரம் உதவியுள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விக்ரம் தற்போது நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘தங்கலான்’ படத்தை இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jailer: மேத்யூவாக மோகன்லால்.. கூஸ்பம்ஸ் கன்பார்ம்: ‘ஜெயிலர்’ படம் குறித்த சூப்பரான தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.