RE scrambler 650 – ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் 650 ஸ்பை படங்கள் வெளியானது

இந்திய சாலைகளில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற 650சிசி என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் 650 சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.

விற்பனையில் உள்ள சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட்டை பெற்றதாகவும் பல்வேறு பாகங்கள் ஸ்கிராம்பளருக்கு உரிதாக மாற்றப்பட்டுள்ளது.

RE Scrambler 650

648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்று சரிசெய்யக்கூடிய லிவர் மற்றும் குரோம்-அவுட் டெயில்லைட் மிகவும் ஸ்டைலாகத் தெரிகிறது. வட்ட வடிவத்திலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது இடம்பெற்று கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொண்டதாக வரக்கூடும்.

விற்பனைக்கு ஸ்கிராம்பளர் 650 அனேகமாக 2024 ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு புதிய மாடல்கள் 350,450 மற்றும் 650சிசி என்ஜின் பெற்று அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளியிட ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

royal enfield scrambler 650 spy shots new royal enfield scrambler 650 spy shots

மேலும் படிக்க – ராயல் என்ஃபீல்டு புல்லட் 350  அறிமுக விபரம்

image source

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.