இந்தி நடிகையான இலியானா 2006-ம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
அதன்பின் 2012- ம் ஆண்டு வெளியான `நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானார். அதன் பின் தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்த இலியானா தனக்கென திரைத்துறையில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் சமீப காலங்களில் திரைத்துறையில் அவர் பெரிதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Snapinsta_app_363259248_1005057173982602_8379892208852833453_n_1080.jpg)
இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். திருமணம் ஆகாத இலியானா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமீபத்தில் தன் காதலனின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தாலும் அவர் குறித்த முழுமையானத் தகவல்களை இலியானா அறிவிக்கவில்லை.
இதனிடையே அவ்வப்போது தான் கர்ப்பமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டருந்த அவர் , “ எங்கள் அன்பு மகனை இவ்வுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இலியானா, ‘Koa Phoenix Dola’ என்று தனது மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார். ஆண் குழந்தை பிறந்துள்ள இலியானாவிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 1ஆம் தேதியே (செவ்வாய் கிழமை) குழந்தை பிறந்ததையொட்டி, அவர் தற்போதுதான் அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.