பிரசத்தி பெற்ற 125சிசி மாடலாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில் மால்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கதாப்பாத்திரங்கள் அயன் மேன் பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா உட்பட ஸ்பைடர்மேன் மற்றும் தோர் ஆகியவற்றில் இருந்து கதாநாயகர்களின் உடை வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட ரைடரை வெளியிட உள்ளது.
முன்பாக, இந்நிறுவனம் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் சூப்பர் ஸ்குவாட் எடிசனை பல்வேறு பிரசத்தி பெற்ற கதாப்பாத்திங்களின் தீம் கொண்டு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
TVS Raider 125
125cc சந்தையில் பிரபலமாக உள்ள ரைடர் 125 மாடலில் 124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் பொறுத்தவரை, டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் கொண்டுள்ளது.
முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.
தோற்ற அமைப்பில் மட்டுமே மாறுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும், மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இருக்காது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.