Rajinikanth: ரஜினி பற்றி ஸ்ரீதேவி அம்மா சொன்னது மாதிரியே நடந்துடுச்சு

Sridevi: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஸ்ரீதேவியின் அம்மா சொன்ன விஷயம் நடந்துவிட்டது.

​ரஜினிகாந்த்​மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தன் சொந்த மகனாக நினைத்திருக்கிறார். ரஜினியும் அவரிடம் பாசமாக பழகி வந்திருக்கிறார். கே. பாலசந்தர் இயக்கத்தில் மூன்றாம் முடிச்சு படத்தில் நடித்தபோது ரஜினிக்கு ரூ. 2 ஆயிரமும், கமல் ஹாசனுக்கு ரூ. 30 ஆயிரமும் சம்பளம். அப்பொழுது நானும் கமல் ஹாசன் போன்று பெரிய ஸ்டார் ஆவது எப்படி என்று ஸ்ரீதேவியின் அம்மாவிடம் கேட்டிருக்கிறார் ரஜினி.பட்டம்​சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்ல​​ரஜினியின் ஆசை​மூன்றாம் முடிச்சு படத்தில் நடித்தபோது கமல் ஹாசன் பெரிய ஸ்டார் என்பதால் அவருக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளமும், புதுமுகம் ரஜினிக்கு ரூ. 2 ஆயிரமும் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் கமல் போன்று பெரிய ஸ்டார் ஆக வேண்டும், ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் ஸ்டார் ஆவது எப்படி என கேட்டிருக்கிறார்.
​பெரிய ஸ்டார்​ரஜினி சொன்னதை கேட்ட ஸ்ரீதேவியின் அம்மாவோ, நீங்கள் கண்டிப்பாக பெரிய ஸ்டார் ஆவீர்கள் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஸ்ரீதேவியின் அம்மா சொன்னது போன்றே ரஜினி பெரிய ஸ்டார் ஆகிவிட்டார், சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். தற்போது சூப்பர் ஸ்டார் மாதிரி ஆக வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​Jailer:முருகா, ஜெயிலர் பிளாக்பஸ்டராகணும்பா: திருப்பரங்குன்றம் கோவிலில் மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகாஸ்

​கோடிகளில் சம்பளம்​Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்கணும்னு தெரிஞ்சுக்கோங்ககமல் ஹாசன் போன்று ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார் ரஜினி. தற்போதோ கமல் ஹாசனை விட பல கோடிகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார். தான் பெரிய இடத்திற்கு வந்துவிட்டாலும் தன்னை சிங்கிள் ஹீரோவாக நடிக்கச் சொன்ன கமல் ஹாசனை ரஜினி மறக்கவே இல்லை. சரியான நேரத்தில் கமல் சொன்ன அறிவுரை பற்றி பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார் ரஜினி.

​நன்றி மறக்கா ரஜினி​வளர்த்துவிட்டவர்களை மறக்காமல் இருக்கிறார் ரஜினி. மேலும் சக கலைஞர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் மதிக்கிறார். அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுகிறார். இந்த குணத்தால் தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

​Vishal: நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்கிறாரா விஷால்?​
​எளிமை​ரஜினி செய்து வரும் சில விஷயங்களை அனைத்து நடிகர்களாலும் செய்ய முடியாது. முடி கொட்டிவிட்டது என்பதை மறைக்கவில்லை ரஜினி. படங்களில் விக்குடன் வந்தாலும் நிஜத்தில் வழுக்கையுடன் வந்து இது தான் நிஜம், அதை நான் ஏற்கிறேன் என நிரூபித்து வருகிறார். மேலும் உடை விஷயத்திலும் சிம்பிளாகவே இருக்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தலைக்கனத்தில் ஆடியது இல்லை.
​வெளிப்படையான பேச்சு​தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையும் வெளிப்படையாக பேசுகிறார். கோடி, கோடியாக சம்பாதித்தும் நிம்மதி இல்லை என்றார் ரஜினி. அது போன்று சொல்ல பலரும் தயங்குவார்கள். ஆனால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், சொல்வார்கள் என யோசிக்காமல் மனதில் பட்டதை பேசுவதாலும் அவரை பலருக்கும் பிடித்திருக்கிறது. ரஜினியின் குணத்தால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.