Pakistan: Election Commission disqualifies Imran Khan for 5 years after his conviction in Toshakhana case | இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 3ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்; தற்போது, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இம்ரான் கானுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரலில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ‘தோஷாகானா’ எனப்படும், அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, லாகூரில் உள்ள வீட்டிலிருந்த இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்தனர்.

தற்போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 3ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.