புதுடில்லி: வரும், 23ம் தேதி நிலவில் இறங்கவிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் எடுத்த புவி, மற்றும் நிலவு தொடர்பான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்கு, சந்திரயான்-3 விண்கலத்தை, இஸ்ரோ ஜூலை 14ல் வெற்றிகரமாக செலுத்தியது. ஆக-5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது.
சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவை நெருங்கியுள்ள சந்திராயன், நிலவிலிருந்து 174 கி.மீ., x 1,437 கி.மீ., தொலைவுக்குக் குறைக்கப்பட்டது.
அடுத்ததாக, வரும், 14 மற்றும் 16ம் தேதிகளில், அடுத்தச் சுற்றுக்கு விண்கலம் செலுத்தப்பட உள்ளது. வரும், 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து பிரிவு நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்நிலையில் இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சந்திரயான் லேண்டரில் உள்ள கிடைமட்ட காமிரா மூலம் எடுத்த படங்களை ஷே ர் செய்துள்ளது. நிலவில் உள்ள பிதாகரஸ் பள்ளம் , எரிமலையால் ஏற்பட்ட சமவெளி துல்லியமாக படம் பிடித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement