சென்னை: அரும்பாக்கத்தில் பள்ளிச் சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய விவகாரத்தையடுத்து, தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் மாடு வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாடுகள் இரவு நேரம் மட்டு மின்றி பகல் நேரங்களில் அதன் உரிமையாளர்களால் திறந்து விடப்படுவதால், அவகைள், சாலையோரங்களில் மேய்ந்து வருவதுடன், சாலையின் நடுவே படுத்துக்கொண்டு போக்குவரத்தையும் சீர் குலைத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி மாடுகளை பிடித்துச்சென்று, […]