அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’.
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். படம் வெளியாகி நேற்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில் நேற்று படம் குறித்தான சில விஷயங்களை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஒரு குடும்ப பிளாக்பஸ்டர் படமான விஸ்வாசத்திற்கு பிறகு ரீமேக் மற்றும் A செண்டர் திரைப்படமான நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்ததுதான் அவரது சினிமா வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு . இதனால் அவரின் ஃபேமிலி ஆடியன்ஸின் எண்ணிக்கை குறைந்து விட்டது. குறிப்பாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட கமர்ஷியல் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என விமர்சகர் ஒருவர் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை காயத்ரி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“ஒரு திரைப்படத்திற்கான வெற்றியின் அளவுகோல் என்பது வசூலைத் தாண்டி, அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக, பல சகாப்தங்களாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை `நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் நடிகர் அஜித்குமார் தொடங்கி வைத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.