தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் Build Ecuador Movement என்ற கட்சியின் சார்பாக பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்யப்பட்டது. இவர் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் அதிர்ச்சி
இதையொட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக ஊழலுக்கு எதிராக ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து பேசினார். இந்த சூழலில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. குறிப்பாக மெக்சிகோவை சேர்ந்த சர்வதேச மாஃபியா கும்பலிடம் இருந்தும் மிரட்டல்கள் வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் ஈக்வடார் தலைநகர் குய்ட்டோவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ கலந்து கொண்டு பேசினார்.
பிரேசில் பயங்கரம்… போதைப்பொருள் கும்பல் அட்ராசிட்டி… சீறிய புல்லட்கள்… 43 பேர் சுட்டுக் கொலை!
பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை
கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறும் போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வில்லவிசென்சியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே பாதுகாப்பு படையினர் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சுற்றி வளைத்து கைது செய்து ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர். கொல்லப்பட்ட பெர்னாண்டோ வில்லவிசென்சியோவிற்கு வயது 59. இவர் பத்திரிகையாளராக இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர்.
ஊழலுக்கு எதிரான குரல்
கடந்த 2007 – 2017 காலகட்டத்தில் அதிபர் ரஃபேல் கோரியாவின் ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியவர். இந்த ஆட்சியில் உயர் பதவியில் இருந்தவர்கள் மீது நீதிமன்ற விசாரணை வேண்டி பல்வேறு புகார்களை அளித்தவர். அப்போது அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்திருந்தார். இவரது படுகொலை அந்நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிபர் கடும் கண்டனம்
இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு அதிபர் குல்லெர்மோ லஸ்ஸோ, இந்த குற்றம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த குற்றத்தை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும். சட்டம் இரும்பு கரம் கொண்டு தனது கடமையை செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் விழுந்த பிரம்மாண்ட பள்ளம்… டோக்சுரி புயலும், மூழ்கடிக்கும் வெள்ளமும்!
தடம் மாறிய ஈக்வடார்
ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவில் உள்ள அமைதியான நாடு என்ற பெயர் பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை அப்படி இல்லை. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இவர்களால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
தங்கள் கூட்டத்தில் சிறுவர்களை சேர்த்து மிகவும் ஆபத்தான குழுவாக இயங்கி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ குரல் கொடுத்து வந்தார். இவரது செயல்பாடுகள் சர்வதேச மாஃபியா கும்பல்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியதாக சொல்லப்பட்டது. இதுவும் ஒரு பின்னணியாக இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.