சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி பாசிட்டிவ் ரெவ்யூக்களை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தில் சொதப்பிய நெல்சன் இந்தப் படத்தில் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். படம் குறித்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அதிகளவில் பாராட்டியுள்ளனர். படத்தின் செலிபிரிட்டி ஷோவில் பங்கேற்ற எதிர்நீச்சல் மாரிமுத்துவும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.