Order to file a case against the abbot who edited the copy of the tribunal order | தீர்ப்பாயம் உத்தரவு நகலை திருத்திய மடாதிபதி மீது வழக்கு பதிய உத்தரவு

பீதர் :
நிலத்தகராறு தொடர்பாக கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு நகலை திருத்திய, மடாதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய பீதர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பீதரின் ஹும்னாபாத்தில் பசவ தீர்த்த லிங்காயத் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சித்தலிங்க சுவாமி. இவருக்கும், அரசு அதிகாரி சந்திரகாந்த் ஜலதாருக்கும் நிலப்பிரச்னை இருந்தது. இதுதொடர்பான வழக்கு, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் நடந்தது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான தீர்ப்பு, சந்திரகாந்த் ஜலதாருக்கு ஆதரவாக வந்தது. இந்த தீர்ப்பின் நகலை, மடாதிபதி சித்தலிங்க சுவாமி, திருத்தம் செய்து உள்ளார். அதாவது, அந்த உத்தரவு நகலில் தன் பெயரை இணைத்து, நிலம் தனக்கு சொந்தம் என்று, அப்போதைய பீதர் கலெக்டரிடம், உத்தரவு நகலை கொடுத்து உள்ளார்.

இந்நிலையில் உத்தரவு நகலில், மடாதிபதி திருத்தம் செய்தது பற்றி, தற்போதைய பீதர் கலெக்டர் கோவிந்த் ரெட்டிக்கு தெரியவந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின், கலபுரகி கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மடாதிபதி மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மடாதிபதி மீது, கிரிமினல் வழக்குப்பதிவு செய்யும்படி, ஹும்னாபாத் தாசில்தாருக்கு, கலெக்டர் கோவிந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.