King of Kotha trailer:பக்கா ட்ரீட்டாக வந்த கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர்: சூப்பர் துல்கர் சல்மான்

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் கிங் ஆஃப் கோதா படம் ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அநத் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இன்றும் விஜய்யை சீண்டிய ரஜினி ரசிகர்கள்
கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநரான சித்திக் ஆகஸ்ட் 8ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைவை அடுத்து ட்ரெய்லர் வெளியீட்டை தள்ளிப் போடுவதாக அறிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

துல்கர் சல்மான் தன் சிறு வயதில் இருந்தே சித்திக்கிடம் நெருக்கமாக இருந்தார். அவர் மறைவால் அதிர்ச்சி அடைந்தார் துல்கர். அதனால் ட்ரெய்லர் வெளியீட்டை தள்ளி வைத்தார்.

இதையடுத்து ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லர் வெளியான ஒரு மணிநேரத்தில் அதற்கு யூடியூபில் 714 ஆயிரம் வியூஸ் கிடைத்திருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களும் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர்.

முன்னதாக கிங் ஆஃப் கோதாவின் டீஸர் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று வெளியானது. அதற்கு சுமார் 13 மில்லியன் வியூஸ் கிடைத்தது.

துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்திருக்கும் கிங் ஆஃப் கோதாவில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக பிரசன்னா நடித்துள்ளார். டான்ஸிங் ரோஸ் ஷபீர், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.