Jailer: முதல் நாளே 'ஜெயிலர்' படம் படைத்த சாதனை: அடேங்கப்பா… தலைவர் சம்பவம்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. பழைய விண்டேஜ் ரஜினியை படத்தில் காட்டியுள்ளதாகவும் வேறலெவலில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான ‘பீஸ்ட்’ பல ட்ரோல்களை சந்தித்தது. விஜய் நடிப்பில் வெளியான இந்தப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதனால் ‘ஜெயிலர்’ படம் எப்படி வருமோ என ரஜினி ரசிகர்கள் மிகவும் பயந்தனர். ஆனால் நெல்சன் மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். இதனை ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ‘ஜெயிலர்’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சி அதிகாலையில் இருந்தே துவங்கினாலும், தமிழ்நாட்டில் பர்ஸ்ட் ஷோ 9 மணியில் இருந்தே ஆரம்பம் ஆனது. ஆனாலும் அதிகாலையில் இருந்தே தமிழ்நாட்டில் ‘ஜெயிலர்’ கொண்டாட்டம் களைக்கட்ட துவங்கியது. மேலும் உலகம் முழுவதும் 7000 மற்றும் தமிழ்நாட்டில் 1200 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது ‘ஜெயிலர்’ படம்.

Gayathrie: அஜித் எடுத்த தவறான முடிவு.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு நடிகை காயத்ரி கொடுத்த பதிலடி.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸில் ‘ஜெயிலர்’ அதிக வசூல் செய்துள்ள படமாக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் இந்த சாதனையை புரிந்துள்ளது ‘ஜெயிலர்’. தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் இல்லாத நிலையில் பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கில் ஜெயிலர் மாஸ் காட்டியுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முதல் நாளில் இந்தப்படம் 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக படத்திற்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் ‘ஜெயிலர்’ படம் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jailer: தலைவர் படம்.. கூஸ்பம்ஸ், பயர்: ‘பேட்ட’ இயக்குனரிடமிருந்து வந்த ‘ஜெயிலர்’ பட விமர்சனம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.