Rajinikanth: விபூதி, குங்குமம், ருத்ராட்ச மாலை, சாந்தமே உருவாக ரஜினி: சூப்பர் ஸ்டாரின் இமயமலை ட்ரிப் வைரல் போட்டோ

Jailer: ரஜினியின் இமயமலை பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

​ரஜினி​தன் ஒவ்வொரு பட வேலை முடிந்ததும் இமயமலைக்கு கிளம்பிவிடுவார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால் நான்கு ஆண்டுகளாக அவர் இமயமலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஜெயிலர் பட வேலை முடிந்ததும் படத்தை பார்த்துவிட்டு இமயமலைக்கு கிளம்பினார். தலைவர் என்ன செய்கிறாரோ என ரசிகர்கள் கேட்ட நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.விமர்சனம்​சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit​​வைரல் போட்டோ​சாதாரண உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் விபூதி, குங்கும், முகத்தில் சாந்தத்துடன் ரஜினி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்தாலே ஒரு அமைதி ஏற்படுகிறதே. தலைவர் இமயமலைக்கு கிளம்பிச் சென்றது நல்லது தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​தனியாக பயணம்​உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமான பிறகு மூத்த மகள் ஐஸ்வர்யாவை துணைக்கு அழைத்துச் சென்றார் ரஜினி. ஆனால் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் பட வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவரால் அப்பாவுக்கு துணையாக இமயமலைக்கு செல்ல முடியவில்ல. தலைவர் தனியாக போகிறாரே என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். தற்போது அவருடன் நண்பர் ரவியை பார்த்ததும் நிம்மதி அடைந்துள்ளனர்.

​ஜெயிலர்​Jailer Collection: 2023ல் தமிழகத்தில் முதல் நாளே அதிகம் வசூலித்த படம் ஜெயிலர்: எத்தனை கோடி தெரியுமா?நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் நேற்று வெளியானது. படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 52 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜெயிலர். அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடும் இந்த நேரத்தில் பக்தி பயணத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

​முத்துவேல் பாண்டியன்​ஜெயிலர் விமர்சனம்ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக ரஜினியை பார்த்த ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். வின்டேஜ் ரஜினியை காட்டியதற்காக நெல்சன் திலீப்குமாருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். படம் பார்க்கும் அனைவரும் ரஜினியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களில் ரஜினியின் பேனருக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

​வசூல் வேட்டை​Jailer Collection: வசூலில் அமெரிக்காவில் புது சாதனை படைத்த ஜெயிலர்: தலைவர் நிரந்தரம்வார நாளில் ஜெயிலர் ரிலீஸாகிறதே, வசூல் எப்படி இருக்குமோ என பேசியவர்கள் வியக்கும் வகையில் இருக்கிறது வசூல் நிலவரம். அமெரிக்காவில் ஜெயிலருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரிலும் ஜெயிலரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இன்றும் வேலை நாள் தான் என்றாலும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது.

​தொடரும் வேட்டை​ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது. ஜெயிலர் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவார் என்று நம்பப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டும் என்று கோவிலில் மண் சோறு சாப்பிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். மேலும் இனி மது அருந்த மாட்டோம் என சபதம் எடுத்தார்கள். இது தவிர்த்து மவுன விரதமும் இருந்தார்கள்.
​ரசிகர்கள் மகிழ்ச்சி​ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் விபரத்தை பார்த்த ரஜினி ரசிகர்களோ, நாம் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை. தலைவருக்கு ஒரு பிளாக்பஸ்டர் கிடைத்திருக்கிறது என கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் எல்லாம் ஜெயிலர் பற்றியே பேச்சாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.