புதுடில்லி,நாட்டின் சுதந்திர தினம் மற்றும் ஜி – 20 மாநாடு நடக்க உள்ள நிலையில், புதுடில்லியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர தினம், 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுடில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார். மேலும், வரும், செப்டம்பரில், ஜி – 20 அமைப்பின் மாநாடு நடக்க உள்ளது.
இதையடுத்து புதுடில்லியின் பாதுகாப்பு தொடர்பாக, புதுடில்லி போலீசார் கடந்த மாதம் 27 – 29ம் தேதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் குறைபாடுகளை உடனடியாக சரி செய்து, அது தொடர்பான அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும்படி, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செங்கோட்டை, மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement