நிலவில் குழிப்பறிக்க போகும் ரஷ்யாவின் லூனா 25… வெளியான முழு விவரம்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா தனது லூனா 25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டது லூனா 25விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களில் ஆய்வுகளை நடத்தி வரும் நாடுகளில் ஒன்று ரஷ்யா. ரஷ்யா கடைசியாக 1976 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா 24 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ததோடு நிலவில் இருந்து 176 கிராம் மண்ணையும் எடுத்து வந்தது.
ரஷ்யா என்ன நோக்கத்திற்காக நிலவிற்கு லூனா 24 விண்கலத்தை அனுப்பியதோ, அந்த திட்டம் வெற்றி பெற்றது.இன்று அதிகாலைஆனாலும் அதன்பிறகு ரஷ்யா நிலவுக்கு எந்த விண்கலத்தையும் அனுப்பவில்லை. இந்நிலையில் தற்போது லூனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா நிலவுக்கு அனுப்பியுள்ளது. சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் லூனா 25 விண்கலத்தை அனுப்பியுள்ளது ரஷ்யா. மாஸ்கோவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு லூனா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
​ குருவாயூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்… ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் காணிக்கை!​உறுதி செய்த ரோஸ்காஸ்மோஸ்
லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உறுதி செய்தது. லூனா-25 விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும். அதன் பிறகு 5 முதல் 7 நாட்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி லூனா 25 விண்கலம் நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பள்ளம் தோன்டி சோதனைலூனா 25 விண்கலத்தின் மொத்த எடை 1.8 டன் ஆகும். 31 கிலோ அறிவியல் உபகரணங்களை சுமந்து செல்லும் லூனா நிலவின் தென் துருவத்தில் 15 செமீ ஆழத்தில் இருந்து பள்ளம் தோன்டி பாறை மாதிரிகளை எடுத்து, உறைந்த நீரின் இருப்பு மற்றும் நீர் மூலக்கூறுகள் குறித்து சோதனை செய்யும் என கூறப்படுகிறது. இந்த லூனா 25 விண்கலம் நிலவில் ஓராண்டு சோதனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நிலவின் தென் துருவத்திற்கு லூனா 25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் நிறுவனத்திற்கு இந்தியாவின் இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது.
​ திருப்பதி வந்தே பாரத் ரயில் திடீர் புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்!​இஸ்ரோ வாழ்த்து

இதுகுறித்து இஸ்ரோ தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள் Roscosmos என தெரிவித்துள்ளது. நமது விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மீட்டிங் பாயிண்ட்டை பெறுவது அற்புதமானது… என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா-25 விண்கலங்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கான பணிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் இஸ்ரோ தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரோ டிவீட்​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.