பாலக்காடு:கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் மூலவருக்கு தங்க கிரீடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, காணிக்கையாக சமர்ப்பித்தார்.
கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா நேற்று காலை 11:30 மணிக்கு வந்தார்.
அவரையும் அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்களை தேவஸ்தான நிர்வாக தலைவர் விஜயன் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ் நிர்வாகி வினயன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து 32 பவுன் தங்கக் கிரீடத்தை கோயில் சன்னதி முன் வைத்து மூலவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர்.
அத்துடன் சந்தனம் அரைக்கும் கருவி கதளிபழம், நெய் ஆகியவையும் காணிக்கையாக வழங்கினர்.
கோவிலில் உச்சபூஜைக்கு பின் அவர் வழங்கிய தங்க கிரீடம் மூலவருக்கு சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அவருக்கு தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் பிரசாதம் வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement