வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், நல்லுறவும் வேண்டும் என்பதால், வெறுப்பு பேச்சு குறித்த வழக்குகளை விசாரிக்க குழு அமைக்குமாறு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது-.
தலைநகர் புதுடில்லி உட்பட பல மாநிலங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுவெளியில் சிலர் பேசும் பேச்சுகள், ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியான மோதல்களுக்கு காரணமாகின்றன.
சமீபத்தில் ஹரியானாவில் ஆறு பேர் கொல்லப்பட்ட வகுப்பு கலவரத்திற்கு, வெறுப்பு பேச்சு தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, ஓர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும்; அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்க வேண்டும் என, “அப்பட்டமான வெறுப்பு பேச்சுகள்” வாயிலாக குறிவைக்கப்படுவதாக சொல்லப்படும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என்.பட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் உத்தரவிட்டு
உள்ளதாவது:சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், நல்லுறவும் அவசியம். அனைத்து சமூகங்களுமே பொறுப்பாக செயல்பட வேண்டும். வெறுப்பு பேச்சு ஒருபோதும் நல்லதல்ல. அதை யாரும் ஏற்க முடியாது.
ஓர் குறிப்பிட்ட பிரிவை அடையாளப்படுத்தும் அல்லது அந்த சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சுகளால், வன்முறை அல்லது மோதல் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்.
வெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க குழு அமைப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மத்திய அரசிடமிருந்து பெற்று, வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement