திருப்பதி பக்தர்களுக்கு எச்சரிக்கை… ஆந்திர வனத்துறை முக்கிய அறிவிப்பு!

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் 7 வது மலைப்பாதையில் இருந்து நரசிம்ம சுவாமி கோவில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி அலிபிரி பாதைஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் சசிகலா தம்பதி தங்களின் 6 வயது மகள் லக்ஷிதாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி மலை பாதை வழியாக நேற்று இரவு நடந்து சென்றனர்.இரவு முழுவதும் தேடல்அப்போது திடீரென லக்ஷிதா மாயமானார். மகளை தேடிய பெற்றோர், நேரம் செல்ல செல்ல பெரும் பதற்றமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று இரவு முழுவதும் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சிறுமியை தேடி வந்தனர்.
​ ஆவின் அதிரடி… தயிரை தொடர்ந்து பால் விலையும் திடீர் உயர்வு… மக்கள் ஷாக்!​உடல் கண்டெடுப்பு

இந்நிலையில் அலிபிரி மலை பாதையில் நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷமாக கோவிலுக்கு வந்த குடும்பம் சிறுத்தைக்கு மகளை இரையாக்கிவிட்டு நிலைகுலைந்து போயுள்ளது.
உயர் எச்சரிக்கை மண்டலம்சிறுமியின் பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதது பலரையும் கலங்க செய்தது. இந்நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் 7 வது மைலில் இருந்து நரசிம்ம சுவாமி கோவில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக ஆந்திர வனத்துறை அறிவித்துள்ளது.
​ திருப்பதியில் பயங்கரம்… சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பலி… அதிர்ச்சி சம்பவம்!​வனவிலங்குகளால் ஆபத்து
வனவிலங்குகளால் அதிக ஆபத்துக்கள் உள்ள பகுதிகளுக்கு உயர் மண்டல எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான அலிபிரி பாதையின் குறிப்பிட்ட பகுதியும் ஆபத்து உள்ளதாக பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி மலைப்பாதை அடர்ந்த சேஷாசலம் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

தொடரும் அச்சுறுத்தல்
இதனால் இங்கு அடிக்கடி சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. கடந்த மாதம் இதே பகுதியில் 3 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதும் இதனால் காயமடைந்த அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.