புதுடில்லி:“பள்ளிக்குக் மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது,” என, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநில கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
டில்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள் மற்றும் நுாலகங்கள் போன்ற இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் மொபல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வராமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
தடையை மீறி, மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வந்தால், பள்ளி நிர்வாகம் அவற்றை லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும.
பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களிடம் மொபைல் போனைத் திருப்பித் தர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவசர காலங்களில் அழைக்கக்கூடிய ஹெல்ப்லைன் எண்களை அனைத்துப் பள்ளிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement