கோவை தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடியில் கேரள மாநிலக் காவல்துறையினர் மற்றும் கலால்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் வழக்கமாக அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_13_at_10_03_05.jpeg)
பேருந்தில் பயணம் செய்த எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூரைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் எஸ்வந்த் (58) என்பவரது நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவரை அதிகாரிகள் சோதனைச்சாவடி அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது ஆடையை கழற்றி சோதனை செய்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சட்டை மற்றும் வேட்டிக்குள் பல லட்சம் ரூபாயைக் கட்டுக் கட்டுகளாக வைத்திருந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20200327_WA0049.jpg)
அதாவது ஆடைக்குள் சிறிய பாக்கெட்டுகள்போல தைத்து, அதில் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் ரூ.24,78,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர் ‘குருவி’ போல வெளிநாட்டில் இருந்து வந்த கறுப்புப் பணத்தை, கோவையில் இருந்து கேரளாவுக்கு எடுத்து செல்லும்போது சிக்கியது தெரியவந்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_13_at_10_03_03.jpeg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_13_at_10_03_04.jpeg)
அந்தப் பணம் எங்கு, யாரிடமிருந்து வந்தது, அதை யாரிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டிருந்தார் என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs